UPSC Exam | UPSC | தேர்வில் நடந்த அதிர்ச்சி - கூகுளில் பதிலை தேடிய மாணவர்

x

சென்னை, பெரம்பூர் அருகே தனியார் பள்ளியில் யு.பி.எஸ்.சி நேஷனல் டிபன்ஸ் அகாடமி அண்ட் நாவல் அகாடமி தேர்வானது நடைபெற்றது. தேர்வில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர், இருமுறை கழிவறைக்கு சென்று வந்துள்ளார். அவரை சந்தேகித்த அதிகாரி பரிசோதனை செய்துள்ளார். அப்போது, அவரிடம் செல்போன் இருப்பதை கண்டறிந்துள்ளார். மாணவர் கழிவறைக்கு சென்று கூகுளில் பதிலை தேடியது தெரியவந்தது. இதை அடுத்து மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்