UPSC - 975 பணியிடங்களுக்கு தேர்வெழுதும் 20 லட்சம் பேர்

x

நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர பதவிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆண்டுதோறும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல் நிலை தேர்வு, இரண்டாம் கட்டமாக முதன்மை தேர்வு, மூன்றாவது நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு, நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இதில் பங்கேற்று உள்ளனர் . 975 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி இந்த போட்டி தேர்வை நடத்துகிறது. பொது அறிவு மற்றும் விருப்ப பாடம் என்ற இரண்டு தாள்கள் காலையிலும், மாலையிலும் நடைபெறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்