உப்பூர் அனல் மின் நிலையம்; தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு அனல் மின்நிலையம் இயங்க தடை விதித்தது. இந்நிலையில், தடை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, மனுதாரர் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
