Paytm, Phonepe, Gpay-க்கு திடீர்னு என்னாச்சு? - இந்தியா முழுக்க உறைந்து நிற்கும் மக்கள்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யுபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக என் பி சி ஐ தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளுக்கு தீர்வு கண்டு வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் என் பி சி ஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மின்னணு பண பரிமாற்றத்துக்காக யு.பி.ஐ. என்ற ஒருங்கிணைந்த மின்னணு பரிமாற்ற சேவை நடைமுறையில் உள்ளது. இதை பயன்படுத்தி, ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கும், வர்த்தகர்களுக்கும் பண பரிமாற்றம் செய்யலாம். நேபாளம், பூடான், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளிலும் இந்திய யு.பி.ஐ. சேவை அமலில் உள்ளது.
Next Story
