வெளியான 'வாடிவாசல்' படத்தின் அப்டேட் - ருசிகர தகவல்
வாடிவாசல் பட ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட்ல தொடங்கப்போவதா தகவல் வெளியாகியிருக்கு.
வெற்றிமாறன் இயக்கத்துல சூர்யா நடிக்கப்போற வாடிவாசல் படம் அறிமுக டீசர் வந்ததுல இருந்தே படத்து மேல மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
நடுவுல எந்த அப்டேட்டும் வராம இருந்தப்ப, அவ்வளவுதான் படம் டிராப்னு வதந்தி பரவுச்சி. இந்த வதந்திய அசால்ல்ட்டா டீல் பண்ண தயாரிப்பாளர் தாணு, பொங்கல் பண்டிகைக்கு அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறதுனு மாஸா அறிவிச்சாரு...
இதுமட்டுமில்ல, படத்துக்கான பாடல் வேலைகள் தொடங்கிட்டதா சமீபத்துல இசையமைப்பார் ஜி.வி. பிரகாஷ்குமார் போஸ்ட் போட, ஃபேன்ஸ் எல்லாம் குஸி.
படத்தோட PRE PRODUCTION வேலைகள் செம்ம வேகமா நடந்துட்டு இருக்க, ஷூட்டிங் எப்ப ஸ்டார்ட் ஆகும்னு கேள்வி வந்துகிட்டு இருக்கு.
சமீபத்துல நேர்காணல்ல பேசுன தயாரிப்பாளர் தாணு, ஜூலையில் ஷூட்டிங் தொடங்க போவதாவும், அதுக்கு முன்னாடியே படக்குழுவை வரவழைச்சி பூஜை போட்டு, ரிலீஸ் தேதியை பிரமாண்டமா அறிவிக்க பிளான் பண்ணியிருப்ப்பதாவும் சொல்லியிருந்தாரு.
இருந்தாலும் சூர்யாவுக்கு அடுத்தடுத்து படங்கள் இருப்பதால, ஷூட்டிங் ஆகஸ்ட்டுக்கு தள்ளிப்போகலாம்னு சினிமா வட்டாரங்கள் சொல்லிட்டு வராங்க...
எது எப்படியே அகிலம் ஆராதிக்க சீக்கிரமே வாடிவாசல் திறக்கப்போகுது...
எது எப்படியோ தாணு போஸ்ட் பகிர்ந்த மாதிரி ...
