நெருங்கும் தேர்தல்.. யாருமே எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட நிதிஷ்குமார்

x

பீகாரில் 125 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டிற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 1 முதல், அதாவது ஜூலை மாத பில்லில் இருந்தே, மாநிலத்தில் உள்ள அனைத்து வீட்டு நுகர்வோர், 125 யூனிட் வரையிலான மின்சாரத்திற்கு எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 3 ஆண்டுகளில், அனைத்து வீட்டு நுகர்வோரிடமிருந்தும் ஒப்புதல் பெற்ற பிறகு, அவர்களின் வீடுகளின் கூரைகளிலோ அல்லது அருகிலுள்ள பொது இடங்களிலோ சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலம் அவர்களுக்குப் பலன்கள் கிடைக்கும் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

பீகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் நிதிஷ்குமாரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்