மனமகிழ் மன்றத்தில் பொல்லாத ஆட்டம் - ஸ்பாட்டிலேயே 43 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்

மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் - 43 பேர் கைது அதிரடி கைது

பல்லடம் அருகே மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 43 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில், மன மகிழ் மதுபான கூடத்தில், சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சூதாட்டம் ஆடியவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் ஆன்லைனில் பல லட்சம் ரூபாய், பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மனமகிழ் மன்ற நிர்வாகி உள்ளிட்ட 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com