தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 10 ஆயிரத்து 540 கோடி ரூபாய் மென் கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மென்கடன் உதவி பெற்ற சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு, நிலுவை தொகை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.