அடையாளம் தெரியாத வாகனம் மோதி | சேலம் சட்டக்கல்லூரி மாணவர் பலி

x

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சட்டக்கல்லூரி மாணவர் பலி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பைக்கில் சென்ற சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோரணம்பட்டி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன் 19 வயதே ஆன, சரண் என்பவர் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து முடித்து இருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் கொண்டலாம்பட்டியில் இருந்து திருவாக்கவுண்டனூர் நோக்கி கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் சிசிடிவி ஏதும் இல்லாத சூழலில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்