Tiruvannamalai | Accidentnews | தி.மலையில் திடீர் பரபரப்பு - 15 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சாலையோரம் நின்றிருந்த நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதுடன் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
Next Story
