Ulundurpet | திருச்சி - சென்னை NHல் திடீர் பரபரப்பு.. ஸ்தம்பித்த போக்குவரத்து

x

உளுந்தூர்பேட்டை அடுத்த சிறுத்தனூரில் 3 கார்கள் மற்றும் 2 லாரிகள் என அடுத்தடுத்து 5 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதித்தது...

சிறுத்தனூர் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடி சாலையின் எதிர் திசைக்கு சென்றது. இதனால், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார்கள், டேங்கர் லாரி மற்றும் ஈச்சர் லாரி என 5 வாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்துக்குள்ளான வாகனங்களால் சென்னை - திருச்சி நான்கு வழி சாலையில் போக்குவரத்து பாதித்தது.


Next Story

மேலும் செய்திகள்