தமிழகத்தில் வழங்கும் பட்டங்களுக்கு சிக்கலா? - அதிர்ச்சி அறிவிப்பு.. பீதியில் மாணவர்கள், பெற்றோர்கள்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்களுக்கு காத்திருக்கும் சிக்கல் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது தமிழக அரசு...

மும்மொழி கொள்கையை தமிழகம் மறுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு 2 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.

இப்போது உயர்க்கல்வித்துறையில் பெரும் இடியாக இறங்கியிருக்கிறது பல்கலைக்கழக மானிய குழுவின் வரைவு அறிக்கை...

உயர்கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த 21 பக்க வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு மத்திய கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

அதில் பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளை ஏற்காத பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், பல்கலைக்கழக மானிய குழு பட்டியலில் இருந்து அந்நிறுவனங்களை நீக்க வேண்டும் என்றும் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இதனால் புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நெருக்கடி எழுந்திருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

இதுபோல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது துணைவேந்தரை தேடும் குழுவில் மாநில அரசு பிரதிநிதி இடம்பெறுவாரா? என்பது தெளிவு இல்லை.

கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட்டத்தை தமிழகம் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com