உடுமலை சங்கர் கொலை வழக்கு - விசாரணை பிப்.27க்கு தள்ளிவைப்பு

உடுமலை சங்கர் கொலை குற்றவாளிகள் மேல்முறையீடு வழக்கில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உடுமலை சங்கர் கொலை வழக்கு - விசாரணை பிப்.27க்கு தள்ளிவைப்பு
Published on

கடந்த 2016ல் நடந்த உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து, தண்டனை பெற்ற குற்றவாளிகள், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை, வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை பிப்ரவரி 27ம் தேதி தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அன்றைய தினம் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com