நள்ளிரவில் பெண்களை குறிவைத்து கல்லால் தாக்கும் நபர் - தலையில் கல் பட்டதில் மூதாட்டி உயிரிழப்பு

உடுமலை அருகே நள்ளிரவில் பெண்களை குறிவைத்து கல்வீசி தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் பெண்களை குறிவைத்து கல்லால் தாக்கும் நபர் - தலையில் கல் பட்டதில் மூதாட்டி உயிரிழப்பு
Published on
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையம் லட்சுமி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன். இவர் கோவையில் வேலை பார்த்து வரும் நிலையில் இவரது வீட்டுக்கு வந்த மர்மநபர் மணிகண்டனின் தாய் ஜோதிலட்சுமியை கல்லால் தாக்கியுள்ளார். மேலும் இதை தடுக்க வந்த மணிகண்டணின் மனைவி கலைவாணியையும் கல்லால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதில் மூதாட்டி ஜோதி லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஜெயலெட்சுமி என்பவரையும் அதே பாணியில் கல்லால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை குறிவைத்து கல்லால் தாக்கும் நபர் போதை ஆசாமியா? அல்லது சைக்கோ நபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com