செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம்: "தி.மு.க.வினரோடு பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்" - உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் தொடர் மரணங்கள் நிகழ்த்தப்படுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம்: "தி.மு.க.வினரோடு பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்" - உதயநிதி ஸ்டாலின்
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் தொடர் மரணங்கள் நிகழ்த்தப்படுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சாத்தான்குளம் இரட்டை கொலைகளை தொடர்ந்து செல்வன் என்ற இளைஞரை தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகருடன் சேர்ந்து கடத்தி கொலை செய்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். திமுகவினரோடு பொது மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ததும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com