"மக்களுக்காக உழைப்போம், மக்களோடு நிற்போம்" - உதயநிதி ஸ்டாலின்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தி.மு.க. இளைஞரணியினர் உதவும்மாறு அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
"மக்களுக்காக உழைப்போம், மக்களோடு நிற்போம்" - உதயநிதி ஸ்டாலின்
Published on

மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தி.மு.க. இளைஞரணியினர் உதவும்மாறு அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 'குடிநீர் பற்றாக்குறைக்கு பருவமழை பொய்த்ததுதான் காரணம்' என்று சாக்குப்போக்கு சொல்லித் தப்பிக்கும் அதிமுக அரசு, இந்த இயற்கைச் சீற்றத்திலிருந்து மக்களைக் காப்பதிலும் பொய்த்துப்போயிருக்கிறது என்பதே உண்மை என்று உதயநிதி ஸ்டாலின் சாடி​யுள்ளார். மக்களுக்கு அத்தியவாசிய உதவிகளை வழங்குவது, சாலையில் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை தி.மு.க. இளைஞரணியினர் ஈடுபட வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com