களைகட்டிய பாரம்பரிய திருவிழா.. அலைகடலென திரண்ட மக்கள் - மீன்பிடித்து கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரணியூர் கடப்பான் கண்மாயில் ஊத்தா கூடை மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊத்தா கூடைகளுடன் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர். மேலும் கட்லா, கெண்டை, ரோகு, பாப்புலட்டு, சிலேப்பி உள்ளிட்ட மீன்களை கிராம மக்கள் பிடித்துச் சென்றனர்.
Next Story
