ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் - பதறிய பயணிகள்.. தெற்கு ரயில்வே கொடுத்த விளக்கம்

x

நடுவழியில் நின்ற ரயிலுக்கு பின்னால் மற்றொரு ரயில் சென்ற சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட பொதுமேளாளர் விளக்கமளித்துள்ளார்.அதில் கடந்த 2 நாட்களுக்கு முன் திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் வரை சென்ற பயணிகள் ரயில், கடம்பூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டதாகவும், அப்போது அதன் பின்னால் வந்த வாரணாசி-கன்னியாகுமரி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயிலை அதிகாரிகள் கண்டறிந்து துரிதமாக செய்ல்பட்டு மின் இணைப்பை துண்டித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், மின்சார ரயில் பாதைக்கான கட்டுப்பாட்டு அறை மதுரையில் இருந்ததால் மின் இணைப்பு விரைவாக துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்