அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...

ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...
Published on
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஓமலூர் அருகே அழகுசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் தேங்காய் நார் நிறுவனம், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் இருந்து தண்ணீரை ஏற்றிக் கொண்டு வந்த இரண்டு டிராக்டர்களை சிறைபிடித்து , கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் , அனுமதி இல்லாமல் தண்ணீரை விற்பனை செய்ததாக இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com