நீச்சல் பழகும் முயற்சி - கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு

x

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு படிக்கச் சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சதுப்பேரி பாளையம் கிராமத்தில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் சிலர், படிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றனர். அவர்களில் மோனிஷா, சிவரஞ்சனி ஆகிய இருவரும் அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் இறங்கி நீச்சல் பழக முயன்று, நீரில் மூழ்கினர். மற்ற மாணவிகள் அவர்களை காப்பாற்ற முயன்றும் பலனிக்கவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், 2 மாணவிகளையும் சடலமாக மீட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்