எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் - இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது

எல்லைதாண்டி மீன்பிடித்த இரண்டு இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் - இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது
Published on

எல்லைதாண்டி மீன்பிடித்த இரண்டு இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். இந்திய கடல் எல்லை பரப்பில் கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக பைஃபர் படகில் வந்த 2 பேரிடம் கடற்படையினர் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் அவர்கள், இலங்கை வல்வெட்டுத்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த நிமலதாஸ் மற்றும் கஜீபன் என்பதும், எல்லை தாண்டி மீன்பிடித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து, நாகை துறைமுகத்துக்கு அதிகாலை கடற்படையினர் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com