காவல் நிலையம் முன்பு இரு சகோதரிகள் தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு
தஞ்சை அடுத்த நடுக்காவேரியில் காவல் நிலையம் முன்பாக இரு சகோதரிகள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை குற்ற வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனையறிந்த தினேஷின் சகோதரிகள் கீர்த்திகா, மேனகா ஆகிய இருவரும் காவல் நிலையம் சென்று விவரம் கேட்டதற்கு காவல் ஆய்வாளர் ஷர்மிளா இருவரையும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் காவல் நிலையத்தின் முன்பாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதில் கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
