Madurai | Murder தந்தை மீது கை வைத்து ஜெயிலுக்கு போன நபர் - ரிலீஸானதும் வெறிகொண்டு உயிரை எடுத்த மகன்
மதுரை மீனாட்சிபுரம் நாடக மேடை அருகே, பட்டப்பகலில் பாண்டித்துரை என்பவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். பாண்டித்துரை என்பவர் மணிரத்தினம் என்பவரது தந்தையிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து மட்டுமில்லாமல் மிரட்டியும் உள்ளார். இந்த வழிப்பறி வழக்கில் சிறைச் சென்ற பாண்டித்துரை, 15 நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியானார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த மணிரத்தினம், நண்பர் ராஜகுருவுடன் சேர்ந்து, சரமாரியாக கத்தியால் குத்தியதில் பாண்டிதுரை உயிரிழந்தார். இதையடுத்து மணிரத்தினம், ராஜகுரு இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Next Story
