ஒரே பெண்ணுடன் 2 பேர் தகாத உறவில் இருந்ததால் நேர்ந்த விபரீதம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கூலி தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கல் நகரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சபரீஸ்வரன், மனைவியை பிரிந்து தனது வீட்டின் அருகே கணவரை பிரிந்து வாழும் மாதவி என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். மாதவியுடன் பாலமுருகன் என்பவரும் ஏற்கனவே தகாத உறவு இருந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பாலமுருகன் நான்கு பேர் கொண்ட கூலிப்படையினருடன் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சபரீஸ்வரனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தலைமறைவான நபர்களை தேடும் பணியில் தனி படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
