Trichy | Crime | கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட இருவருக்கு நேர்ந்த கதி
Trichy | Crime | கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட இருவருக்கு நேர்ந்த கதி #Trichy #Crime #Drugs #thanthitv கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட இருவருக்கு அரிவாள்வெட்டு திருச்சி, கொட்டப்பட்டு பகுதியில் கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் மற்றும் அவரது நண்பர் ஜெகன் ஆகியோர், அப்பகுதியில் சுற்றித்திரிந்த மூவரிடம் கஞ்சா பயன்படுத்தக் கூடாது என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் மூவரும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்
