ஒரே நாளில் இரண்டு தங்கம் - கெத்து காட்டிய இந்திய வீரர்கள்

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் 16வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (Aishwary Pratap Singh Tomar) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பிரிவில் பிரதாப் 462.5 புள்ளிகளை எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம், ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஹாட்ரிக் பதக்கங்களை வென்றுள்ளார். இதே போன்று, ஜூனியர்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3P பிரிவில் அட்ரியன் கர்மகர் (Adriyan Karmakar) தங்க பதக்கத்தை வென்று, ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளார். அவருடன் போட்டியிட்ட சக இந்திய வீர‌ர் வேதாந்த் வாக்மரே (Vedant Waghmare) வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com