கூட்டுறவு சங்க அதிகாரி தற்கொலையில் உடன் பணியாற்றிய இருவர் கைது

x

திருச்சியில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அதிகாரி சாமிநாதன் தற்கொலை வழக்கில், உடன் பணியாற்றிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர் அருகே நடராஜபுரத்திலுள்ள கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய அதிகாரிகளே, நகை கையாடலில் ஈடுபட்டது கடந்த வாரம் தெரிய வந்தது.

கையாடலில் ஈடுபட்ட அதிகாரிகளில் ஒருவரான சாமிநாதனை மட்டும், கையாடல் நகைக்கு ஈடாக பணம் கட்ட சொன்னதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தனது சாவிற்கு உடன் பணியாற்றிய கிருத்திகா, ராமதாஸ் ஆகியோர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்த நிலையில், அவரது இழப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து விசாரனை நடத்திய போலீசார், சாமிநாதன் உடன் பணியாற்றிய கிருத்திகா, ராமதாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்