ditwah cyclone || சென்னையை உலுக்கும் டிட்வா பழமையானமரத்தை வேரோடு சாய்த்த பலத்த காற்று
அபிராமபுரத்தில் ராட்சச மரம் முறிந்து விழுந்ததால் இரண்டு கார்கள் சேதம்;
சென்னையில் இடைவிடாமல் பெய்து வரும் மழையின் தாக்கத்தால், அபிராமபுரம் பகுதியில் சற்று நேரத்துக்கு முன் பசுமைவழிச் சாலையில் பெரிய ராட்சச மரம் ஒன்று திடீரென முறிந்து சாலையின் மீது விழுந்தது.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மரத்தின் கீழ் சிக்கி சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரம் விழுந்ததையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
கிரீன்வேஸ் ரோடு சந்திப்பில் இருந்து அபிராமபுரம் காவல் நிலையம் நோக்கி வந்த வாகனங்கள் காமராஜர் சாலை சந்திப்பிலேயே மாற்றி விடப்பட்டுள்ளன.
அதேபோல் RA Puram இரண்டாவது மெயின் ரோடு சந்திப்பிலும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சாலையில் கிடந்த மரக்கட்டைகளை அகற்ற மாநகராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மழையின் காரணமாக சென்னைbஅபிராமிபுரம் பிரதான சாலையில் மரம் சரிந்து விழுந்ததில் இரண்டு சொகுசு கார்கள் சேதமடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
