கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

சென்னை மாதவரத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது
Published on

சென்னை மாதவரத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் உள்ள மதுபானகடையில் நேற்றிரவு 8 மணியளவில் இளைஞர் ஓருவர் 500 ரூபாய் கொடுத்து மதுபானம் கேட்டுள்ளார். விற்பனையாளருக்கு சந்தேகம் வர அவரிடம் விசாரித்துள்ளார். இதனை அடுத்து ஓட்டம் பிடித்த நபரை , பொது மக்கள் உதவியுடன் பிடித்து மாதவம் போலீசில் ஒப்படைத்துள்ளனர். பிடிபட்டசுப்பரமணி கொடுத்த தகவலின் பேரில் வியாசர்பாடியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்தபட்ட ஜெராக்ஸ் எந்திரம் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் போன்றவற்றை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து சாகுல் அமீது மற்றும் ரெஜீனா ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com