Chennai | பெட்ரோல் பங்கில் இருந்து காரை தூக்கி சென்ற இருவர் | பேருதவியாக உள்ளே இருந்த அந்த பொருள்

x

பெட்ரோல் பங்கில் இருந்து காரை திருடிச் சென்ற இருவர் கைது

சென்னை வியாசர்பாடியில் பெட்ரோல் பங்கிற்கு டீசல் நிரப்ப வந்த சொகுசு காரை, குடிபோதையில் இருந்த இளைஞர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடியில் மெல்வின் என்பவர், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் நிரப்பி விட்டு, காரில் இருந்து இறங்கி பணம் செலுத்திக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த 2 பேர், காரை எடுத்துக் கொண்டு தப்பினர்.

மெல்வினின் செல்போன் காரில் இருந்ததால், அதை வைத்து போலீசார் தேடியதில், அந்த கார் கும்மிடிப்பூண்டி வரை சென்று விட்டு, மீண்டும் புழல் வரை வந்து நின்றது தெரியவந்தது.

கார் பழுதானதால், அவர்கள் காரை நிறுத்தி விட்டு, செல்போன்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மீண்டும் செல்போன் எண்ணை வைத்து தேடிய போலீசார், காரை எடுத்துச் சென்ற கண்ணதாசன் நகரை சேர்ந்த சூர்யா மற்றும் அவருடைய நண்பர் பரத் ஆகியோரை கைது செய்ததோடு, காரை மீட்டு மெல்வினிடம் ஒப்படைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்