கர்ப்பிணி வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் மரணம் - உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

x

புதுச்சேரி தனியார் கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாத், சுமதி தம்பதி. இவர்கள் தனியார் கருத்தரித்தல் மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுமதி கர்ப்பம் அடைந்தார். கருவில் இரட்டை குழந்தைகள் இருந்த நிலையில், திடீரென பனிக்குடம் உடைந்து அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் ஒரு வார காலம் கழித்து, ஓரு குழந்தை கர்ப்பப் பையிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தங்களிடம் மருத்துவ வசதியில்லை எனக் கூறி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அங்கு இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்