விஜய் குறித்த கேள்வி.. பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர்
தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைச்சர் மதிவேந்தன் காரில் வேகமாக சென்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.ராஜேஷ்குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Next Story
