TVK Viral Audio| ``என் மகனுக்கு ஏன் தகவல் சொல்லல’’ - கொந்தளித்த தவெக நகர செயலாளரின் தாயார்

எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் குறித்து தவெக நகர செயலாளர் பரபரப்பு ஆடியோ தனக்கு ஏதேனும் நேர்ந்தால் பென்னாகரம் எம்.எல்.ஏ கஜேந்திரனின் ஆதரவாளர்களே காரணம் என தவெக நகர செயலாளர் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தனது மகனுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷின் தாயார் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது எம்.எல்.ஏ ஆதரவாளர்களுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ரமேஷின் தாயாரை தள்ளிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரமேஷ் வெளியிட்ட ஆடியோவில், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு எம்.எல்.ஏ ஆதரவாளர்களே காரணம்” என பேசியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com