TVK விஜய் பிறந்தநாள் - தவெகவினர் அன்னதானம்
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன் ஏற்பாட்டில் சுமார் 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை பூஜையுடன் சமையல் தொடங்கி, விடிய விடிய உணவு தயார் செய்யப்பட்டது.
வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே 5,051 பேருக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அவருடன் இணைச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரசாந்த் மற்றும் வேலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதேபோல வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 35 வார்டுகளிலும் வார்டுக்கு சுமார் 251 பேர் வீதம் 8,785 பேருக்கு தவெக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
