TVK Velmurugan Protest | Bigg Boss மீது வழக்கு போடுவோம்.. போராட்டத்தில் வேல்முருகன் ஆவேசம்
பிக்பாஸ் - நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் - வேல்முருகன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, செம்பரம்பாக்கத்தில் உள்ள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் உள்ள குத்தம்பாக்கத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழ் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி வெளியேற வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஒழுங்குபடுத்தவில்லை எனில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
Next Story
