TVK | Velmurugan | வேல்முருகன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார்

x

வேல்முருகன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார்

தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யக்கோரி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்து வேல்முருகன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகவும், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆதித்ய சோழன் என்பவர், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக புகார் அளித்தார். இந்த புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் மற்றும் சபாநாயகருக்கும் பதிவுத் தபாலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்