TVK MLA | Theni | குப்பையாய் கிடந்த வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த தவெக MLA
குப்பையாய் கிடந்த வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த தவெக MLA
TVK MLA | Theni | குப்பையாய் கிடந்த வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த தவெக MLA
#MLA #tvk #Theni #thanthitv
மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தவெக எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம், கம்பம் – சுருளிப்பட்டி சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் குப்பைகள் மற்றும் கழிவுகளால் மாசடைந்து காணப்பட்டதை தொடர்ந்து, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அவருடன் கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தவெக நிர்வாகிகளும் இணைந்து வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றினர். சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலில் மீண்டும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
