MLA Kanimozhi Santhosh || மருதமலை கோவிலில் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தரிசனம்
மருதமலை கோவிலில் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தரிசனம்
MLA Kanimozhi Santhosh || மருதமலை கோவிலில் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சாந்தோஷ் தரிசனம் கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத் திருவிழாவில் கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ டாக்டர் கனிமொழி சாந்தோஷ் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். திருக்கல்யாண விழாவையொட்டி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்களுடன் இணைந்து வழிபட்ட எம்.எல்.ஏ கனிமொழி சாந்தோஷ், பொதுமக்களிடம் நலம் விசாரித்து கலந்துரையாடினார். மேலும், முருகப்பெருமானின் அருளால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளம் பெருக வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தார். திருக்கல்யாண விழாவில் எம்.எல்.ஏ பங்கேற்றது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #MLAKanimozhiSanthosh #tvk #thanthitv
