Polur | TVK | DMK | TN Police | போளூர் காவல் நிலையத்தில் தவெக –திமுக தொண்டர்கள் போட்டி போட்டு புகார்

போளூர் காவல் நிலையத்தில் தவெக –திமுக தொண்டர்கள் போட்டி போட்டு புகார்

Polur | TVK | DMK | TN Police | போளூர் காவல் நிலையத்தில் தவெக – திமுக தொண்டர்கள் போட்டி போட்டு புகார்

#Polur #TVK #DMK #TNPolice

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், தவெக எம்எல்ஏ அபிஷேக் மீது திமுக நிர்வாகியின் மனைவி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தபோது, திமுக மாவட்ட நிர்வாகி பூமாலை ஏழுமலை தரப்பினருக்கும் தவெக எம்.எல்.ஏ, அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எம்எல்ஏ அபிஷேக் உள்ளிட்ட 7 பேர் தன்னைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, பூமாலை ஏழுமலையின் மனைவி இந்திரா போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக மாவட்ட இணைச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டு எதிர்ப்புப் புகார் மனு அளித்தனர். மக்கள் பணியில் ஈடுபட்ட எம்எல்ஏ மீது அவதூறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்தனர். இதனால் போளூர் காவல் நிலையத்தில் தவெக – திமுகவினர் இடையே பரபரப்பான சூழல் நிலவியது. இரு தரப்பினரும் அளித்த புகார்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

X