TV| Nellai News | டிவியை நோக்கி சென்றது 3 வயது சிறுவன் உயிரை பறித்தது
வீட்டில் விளையாடிய 3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
வீட்டில் விளையாடிய 3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வீட்டைச் சுத்தம் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிவிக்கு செல்லும் மின்கம்பி, தரையில் விழுந்தபோது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மகனை காப்பாற்ற முயன்ற தாய் ஜானகி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
