தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் சிறுவர், சிறுமிகள் மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் 5 வயது முதல் 15வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி, மனு அளித்தனர்.