தப்பை தட்டி கேட்டவருக்கு நேர்ந்த கதி | போதை இளைஞர்கள் வெறி செயல்
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மரடோனா என்பவர் கப்பல் மாலுமியாக பணியாற்றிவிட்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த போது மது போதையில் மதன்குமார் உள்ளிட்ட மூன்று பேர் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதை தட்டி கேட்டதற்கு கடற்கரையில் வைத்து மதன் குமார் உள்ளிட்ட 3 பேர் கும்பல் மரடோனாவை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் மரடோனா சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Next Story
