புதுச்சேரி கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகள் - வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

புதுச்சேரி கடற்கரை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டனர்.
புதுச்சேரி கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகள் - வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்
Published on

புதுச்சேரி கடற்கரை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டனர். புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு செல்வது வழக்கம். இதனை சமூக விரோதிகள் சிலர் திருடி ஆமை முட்டைகளில் மருத்துவ குணம் உள்ளது என்று கூறி விற்று விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் புதுச்சேரியை ஓட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுகுப்பம் கடற்கரை மணற்பரப்பில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட அலீவ் ரிட்லி வகை ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com