Anna University Case| ``புழல் ஜெயிலில் லைட்டை ஆஃப் செய்து ஞானசேகரனை..’’ - தாயார் சொன்ன பகீர் தகவல்

``புழல் ஜெயிலில் லைட்டை ஆஃப் செய்து ஞானசேகரனை..’’ - தாயார் சொன்ன பகீர் தகவல்

``புழல் ஜெயிலில் லைட்டை ஆஃப் செய்து ஞானசேகரனை..’’ - தாயார் சொன்ன பகீர் தகவல்

#annauniversitycase #annauniversitygnanasekaran

புழல் சிறையில் ஞானசேகரன் மீது தாக்குதல் என தாயார் புகார்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஞானசேகரன், சிறைக்காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக, அவரது தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு கடந்த 20-ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி, சிறைத்துறையினர் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிறையில் விளக்குகளை அணைத்துவிட்டு, ஜெயிலர் சாந்தகுமார் உள்ளிட்ட 5 காவலர்கள் தன்னை லத்தியால் கொடூரமாகத் தாக்கினார்கள் என்று, ஞானசேகரன் தன்னிடம் கூறியதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

சிறைவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அதிகாரிகளே மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com