

திடீரென டெல்லி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தாம் தனிப்பட்ட பயணமாக சென்றேன் என கூறியுள்ளார். டிடிவி தினகரன், உதவியாளர் ஜெனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோருடன் சென்னையில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் சென்றார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வெளியே வராமல் இருந்த தினகரன், திடீரென டெல்லிக்கு சென்றார். சிறையில் உள்ள சசிகலா விடுதலைக்கான நடவடிக்கையாக டெல்லி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு 9 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை திரும்பிய அவர் தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றதாக கூறினார்.