

சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த கோரிக்கையை முன் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, மூன்று எம்.எல்.ஏக்கள் வழக்கு விரைவாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.