டிரம்ப், இஸ்ரேலுக்கு நேரடி எச்சரிக்கை - உலகை அதிரவைத்த கமேனி அறிவிப்பு
"ஈரான் வரலாறு தெரியுமா? தெரிந்தா இப்படி பேச மாட்டீங்க" டிரம்ப், இஸ்ரேலுக்கு நேரடி எச்சரிக்கை
மத்திய கிழக்கில 6 ஆவது நாளா இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தொடருது. ஈரான்ல தாக்குதல தீவிரமாக்கியிருக்கர இஸ்ரேல், ஈரானோட ஏவுகணை தயாரிப்பு மையம், ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவெச்சு தாக்கிருக்கு. அணுசக்தி மையங்களையும் தொடர்ந்து தாக்கிட்டு வருது. டெஹ்ரான சுத்தியும் குண்டு வெடிப்பு சத்தமும் கேட்டுக்கிட்டே இருக்கு. டெஹ்ரான்ல யுரேனியம் பிரித்தெடுக்கும் மையத்திலயும் இஸ்ரேல் தாக்குதல நடத்தியிருக்கு. இதுக்கு பதிலடியா இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகள, ட்ரோன்கள வீசிட்டு வருது. ஈரான் ஏவக்கூடிய ஏவுகணைகள், ட்ரோன்கள இஸ்ரேலோட வான் பாதுகாப்பு கட்டமைப்பு சுட்டு வீழ்த்திட்டு வருது. இஸ்ரேலோட டெல் அவிவ் மேல Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவுனதா ஈரான் தெரிவிச்சிருக்கு. அது சம்பந்தமான காட்சிகள் பார்க்கலாம்.
ஈரானோட உச்சப்பட்ச தலைவர் கமேனி இருக்கர இடம் எங்களுக்கு தெரியும், ஆனா இப்போதைக்கு கொல்ல போரதில்லன்னு அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லிருந்தாரு. அதேசமயம் நிபந்தனையின்றி கமேனி சரணடையனும் அப்படீன்னும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தாரு. இதோட தொடர்ச்சியா அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கமேனி பதில் எச்சரிக்கைய கொடுத்தாரு. அதாவது சமூக வலைதளத்தில கோட்டை வாயில்ல படைகள் வாள் ஏந்தி நிற்கர புகைப்படங்கள வெளியிட்ட கமேனி, போர் தொடங்குது, இனிமே சியோனிஸ்ட்டுகளுக்கு இரக்கம் காட்ட முடியாதுந்னு சொல்லிருந்தாரு. பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிரா பலத்தோட இயங்கனும்னும் சமரசத்துக்கு வாய்ப்பே இல்லன்னும் கமேனி குறிப்பிட்டிருந்தாரு.
இந்த நிலையில அமெரிக்காவோட விமானம் தாங்கி போர்க்கப்பல், போர் விமானங்கள், குண்டு வீச்சு விமானங்கள் மத்திய கிழக்கை நோக்கி நகருதுங்கர தகவல்களும் வெளியாச்சு. அமெரிக்கா, பிரிட்டன்ல இருந்து 30-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மத்திய கிழக்கிற்கு போயிருப்பதாவும் தகவல்கள் வெளியாகியிருக்கு. இந்தியப் பெருங்கடல்ல இருக்கர அமெரிக்கா - பிரிட்டன் டியாகோ கார்சி விமானப்படை தளத்துலயும் விமானங்கள் தயார் படுத்தப்படுவதா தகவல்கள் வெளியாகிருக்கு. இங்கு ஏற்கனவே அமெரிக்கா தன்னுடைய பி2 போர் விமானங்களை நிலைநிறுத்தியிருப்பது கவனிக்கத்தக்க ஓனு தான். ஐரோப்பிய யூனியனில் இருந்து போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் அமெரிக்கா மத்திய கிழக்குக்கு அனுப்ப இருக்கரதாவும் தகவல்கள் வெளியாகிருக்கு.
இந்த நிலையில ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப், வெள்ளை மாளிகையில அவசரக் கூட்டத்தையும் நடத்தினார். அதல ஈரானிய அணுசக்தி தளங்கள தாக்கும் இஸ்ரேல், தொடங்கியிருக்குர இந்த போர்ல அமெரிக்கா சேர வேண்டுமா அப்படீங்கரத பத்தி விவாதிக்கப்பட்டுருக்கு. அமெரிக்கா போர்ல இணையும் விவகாரத்தில டிரம்ப்போட நெருங்கிய ஆலோசகர்களிடையே முழுமையான உடன்பாடு இல்லங்கர தகவலும் வெளியாகிச்சு. ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்பனும்னு , பல நாட்களா வலியுறுத்திட்டு வந்த டிரம்ப், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலோட போர்ல அமெரிக்கா நேரடியா ஈடுபட வேண்டுமா? ங்கரத பத்தி பரிசீலிப்பதாவும் தகவல் வெளியாச்சு.
ஈரான் நிபந்தனையின்றி சரணடையனும்னு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த வேளையில, ஈரானோட உச்சப்பட்ச தலைவர் கமேனி பதில் எச்சரிக்கை விடுத்தார். ஈரான்ல தொடர்ச்சியா இஸ்ரேல் தாக்கும் வேளையில நாட்டு மக்களுக்கு கமேனி உரையாற்றிருக்காரு. அதுல இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செஞ்சிருக்குன்னும், அதுக்கான தண்டனைய நிச்சயம் கொடுப்போம்னும் பேசிருக்காரு. அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டா, சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை சந்திக்கும்னும் எச்சரிச்சிருக்காரு. ஈரானோட வரலாற்றை பத்தி நல்லா தெரிஞ்சவங்க, எங்களை அச்சுறுத்தும் மொழியில பேசமாட்டாங்கன்னு சொன்ன கமேனி ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல அப்படீன்னு டிரம்பிற்கும், இஸ்ரேலுக்கும் நேரடி எச்சரிக்கையை விடுத்திருக்காரு.
