Trump | USA | "நாடே முடங்கும் அபாயம்.." சிக்கலில் டிரம்ப்
அமெரிக்காவில் செலவின மசோதா நிறைவேறாததால், ஏராளமான அரசு பணியாளர்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் செலவினங்களை ஈடுசெய்யும் செலவின மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதில் இழுபறி நீடிக்கிறது.
இதனால் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தடைபட்டு, அரசு நிர்வாகமே முடங்கியது.
இதே நிலை தொடர்ந்தால், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் வேலை இழக்க நேரிடும் என்றும்,
முக்கிய திட்டங்கள் முடங்கும் சூழல் உருவாகும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே செலவின மசோதா நிறைவேறாததால், நியூயார்க் நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி 18 பில்லியன் டாலரையும்,
மாகாணங்களில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 பில்லியன் டாலர் நிதியையும் டிரம்ப் நிறுத்தி வைத்தார்.
இந்தச் சூழலில் அரசு ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியிருப்பதாக அவர் கூறியது அமெரிக்க மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
