லஞ்சம் கொடுக்காததால் லாரி டிரைவருக்கு ரூ.2000 அபராதம்?

x

சேலத்தில் சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்த லாரி டிரைவர் லஞ்சம் தராததால், போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முத்துக்குமார் என்ற லாரி ட்ரைவர் சேலம் மேம்பாலத்தில் சிறுநீர் கழிப்பதற்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியின் பின் தான் ஓட்டி வந்த கண்டெயினர் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார் லாரியை இங்கு நிறுத்தக் கூடாது என கூறி லஞ்சம் கேட்டுள்ளனர். லாரி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த போலீசார் 2 ஆயிரம் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்காததால் ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர் என டிரைவர் முத்துக்குமார் மனவேதனையுடன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்