அசுர வேகத்தில் கார் மீது மோதிய மண் லாரி.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

பூந்தமல்லி அருகே அதிவேகமாக வந்த மணல் லாரி, கார் மீது மோதிய கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பூந்தமல்லி அருகே அதிவேகமாக வந்த மணல் லாரி, கார் மீது மோதிய

கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருமழிசையில் மணல் லாரி ஒன்று திருப்பதி செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே மணல் லாரி நின்றது. இதனை தொடர்ந்து பின்னால் வந்த காரும் நின்றது.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு மணல் லாரி கார் மீது மோதியது. இதனால் கார், முன்னால் நின்ற லாரி மீது மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com